Home
About Me
Hinduism
Poems
King Asoka
Tamil Poems
Guest Book
New Page 1
New Page 2

 

 


கற்பனையில் உதித்த சில வரிகள் இங்கே............

 

 

 
தமிழில் தடம் பதித்த பாதங்கள்
தளர்வடையா தொடரும் கலைப்பயணமதை
செவ்வாய் செப்பும் செந்தமிழ்
சிறப்பும் சங்கமிக்கும் அதன் அழகினிலெ.......
 

 

 

பேண்ணின் வளர்வும் அதிசயமே!!!

இளம்மாந்தளிர் தனை வென்ற
இனிய மழலைப்பருவம்
இன்குரலாய் மழலை மொழி செப்பி
இட்டும் தொட்டும் துண்டியை துளாவும் - அதன்
இன்விரல்களும் இணையிலா அதிசயமே!

மங்காத பண்பு பூவையிடத்தில்
மணிமகுடமாய் திகழும் மங்கைப்பருவம்
மலர் மென்மை மனம் பெற்று
மாந்தர் தமை கவரும் கயல்விழியும்
மலரும் திருவதனமும் அவள் அழகும் அதிசயமே!

பெற்றோர் விரும்பிய மணாளனை
பேராதரவாய் கைப்பிடிக்கும் மணப்பருவம்
பூங்கழுத்தில் மூன்று முடிச்சும் சுமந்து
முளு நிலவன்ன முகத்தில் திலகமும் இட்டு
கூந்தலில் மலர் மாலையும் தொங்க குதூகலிப்பதும் அதிசயமே!

குழந்தைக்கொரு அன்னையாய் - குலவும் மேதினியில்
குடும்பத்தலைவியாய் நிறையும் தாய்ப்பருவம்
குதர்க்கம் பேசா குணசாலியாய்
குலம் விளங்க இல்லறத்தினை
 நல்லறமாய் நாடுவதும் அவள் அதிசயமே!

பால் நிலவொளியில் பேரன் பேத்தியர்க்கு
பாலர் கதை செப்பும் பாட்டிப்பருவம்
பல அறிவுரைதனை புதுமையாய் புகுத்தி
பாமகனாம் இறைதனில் இணைய எண்ணி
பக்தியாய் அவன் அடி தொழுவதும் அதிசயமே!

                                                                              ஜெயா

 

 


ஆதுலர் சாலை அன்னையின் புலம்பல்.....

பெறுமவற்றில் பேறென உனை நினைத்த
பெற்ற ஆத்தா நானெடா 
உண்டி சுருக்கி உனை வளர்க்க -நான் பட்ட பாடு
உத்தமனாம் அவ் இறைவனுக்கு தானடா தெரியும் 

அப்பன் அடிக்கும் வேளை தனில் - உனை
அரவணைத்த ஆத்தா நானெடா
கல்வி பயிற்றுவித்தேன் கசடற - உனை
கற்றாவனென மேதினி மதித்திட 

பேரன் பேத்தியருடன் குலவி மகிழ காத்திருந்த
பேதையெனை உறவறுத்து - ஏனடா
ஆதுலர் சாலைக்கு அழைத்து வந்தாய்?
ஆண் மகனெ நான் பெற்ற மகனெ


இன்னொரு பிறப்பிருந்தால் யானுனக்கு
இனிய மகனாக பிறப்பெடுத்து
உளம் குளிரும் படி - யானுனை
உலவி வர வழி சமைத்திடுவெனடா

                                                                                         ஜெயா

 



என் வீழ்ச்சி.......

பச்சை பசேலென்ற பசும்புற்தரையில்
பாதம் பதித்தது மகிழ்ச்சி
பணிவான பாலருடன் பாடல் பாடி
பரிசு மழையில் நனைந்தது புகழ்ச்சி
பட்டாம் பூச்சியாய் பறந்துதிரிந்து
பலவண்ண கருத்தறிந்து கற்றது உயர்ச்சி
பண்பான பாவையரை பச்சை முகச்சிரிபில்
பன்னெடுங் காலமாய் கண்டு கழித்தது குளிர்ச்சி
பரிதாபத்துடன் பழகிய உறவுகளை
பாதியில் விட்டு வந்தது என் வீழ்ச்சி

                                                                                         ஜெயா

 

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

copyright by P.Jeya

September 2002